Header Ads



2 ஆயிரம் டொலர் வரை விற்கப்படும், அரியவகை ஆமை கிளிநொச்சியில் கண்டுபிடிப்பு


கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமையொன்று மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே அந்த ஆமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த ஆமை இனமானது அருகிவரும் நட்சத்திர ஆமை வகையை சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆமை இனமானது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாட்டிற்கு உரித்துடையவை எனவும், கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் அரிய வகையான ஆமை இனம் இதுவெனவும் தெரியவருகின்றது. உலகளவில் அதிகம் கடத்தப்படும் உயிரினங்களில் இந்த நட்சத்திர ஆமை இனமும் ஒன்றாகும். ஒரு நட்சத்திர ஆமையின் விலை 500 டொலரிலிருந்து 2 ஆயிரம் டொலர் வரை சர்வதேச சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.