வத்தளையில் 23 வயது நபர் சுட்டுக்கொலை - காரணம் வெளியானது
வத்தளை, எலகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் 23 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இன்று மதியம் 12.10 மணியளவில் வத்தளை, எலகந்த சந்தியில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் துப்பாக்கியால் சுடும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் மட்டக்குளி அலிவத்தை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நிப்புன் சந்திக பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு தற்போது காணாமல் போயுள்ள மொலவத்தை பில்டர் கிரிஷாந்தவின் மகன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலியானவர் உடற்பயிற்சி மையத்தில் இருந்து வெளியே வந்து , மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சுடப்பட்டுள்ளார்.
T-56 துப்பாக்கியால் 11 முறை சுடப்பட்டுள்ளதாவும் தலையில் தோட்டா துளைத்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் அருகில் இருந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளன.
போதைப்பொருள் கடத்தல்காரன் வெல்லே சாரங்கா துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னணியில் இருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த நாட்டுக்கு போதைப் பொருட்கள் கொண்டுவரப்படுவதைத் தடை செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் நிச்சியம் ஒரு தீர்க்கமான முடிவைக் கொண்டுவர வேண்டும்.
ReplyDelete