ரணில், விஜயதாசா விடாப்பிடி - பீரிஸ் வெளிநடப்பு - பிரச்சினைக்குத் தயாராகும் அமைச்சர்கள், 21 தொடர்பில் இழுபறி
இந்தநிலையில் 21வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு தனிப்பட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இதில் தமது சொந்தக்கருத்துக்களை கோட்டாபய குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் உள்ளடக்கத்துக்கு அமைச்சர் ஜி.எல் .பீரிஸூம் , ஜனாதிபதிக்கு உதவியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாளை திங்கட்கிழமை, அமைச்சரவையில் முன்வைக்க அரசாங்கம் உத்தேசித்துள்ள வரைவு வரைவு தொடர்பில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் விக்கிரமசிங்க மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சரும் பங்கேற்றார். இதன்போது 21வது வரைவு தமது பொதுஜன பெரமுனவின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.
பின்னர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். எனினும் இது ஒரு போராட்டமா அல்லது வேறு காரணமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இதற்கிடையில் கட்சி தலைவர்களின் இந்த கூட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக பிரதமரின் தரப்பில் இருந்து பதில் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் நாளை அமைச்சரவையில், சில அமைச்சர்கள் 21வது வரைவு குறித்து பிரச்சினையை எழுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. TW
Post a Comment