கோட்டாபய புட்டினுடன் தொடர்பு, கத்தாருடன் பேச்சு, இந்தியாவும் உதவி - 10 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைபோன்று இடம்பெறும்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் எரிபொருளைப் பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Post a Comment