வெளிநாடு செல்பவர்கள் 100 வீதத்தினால் அதிகரிப்பு - 5 மாதங்களில 120,000 இற்கும் அதிகமானோர் பறந்தனர்
வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இது 100% முன்னேற்றம் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
இந்த ஆண்டு 300,000 பேரை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment