தமது வீடுகள் தீயிடப்படலாம் என்ற அச்சத்தில் அரசியல்வாதிகள் - சபாநாயகருடனான ZOOM கூட்டத்திற்குக்கூட வரவில்லை
இதனால் பல அரசியல்வாதிகள், தமது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில்,குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளனர்.
தற்போதைய நெருக்கடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக, கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டமொன்றை சபாநாயகர் இன்று புதன்கிழமை 11 ஆம் திகதி கூட்டியிருந்தார்.
என்றாலும் இன்றைய கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை
தங்களுடைய வீடுகள் கொளுத்தப்பட்டமையால் லெப்டொப்புகள் தீயில் கருகி சூம் ஊடான கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிற்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் முடிவுகள் எட்டப்படாமலே நிறைவடைந்தது.
நாட்டில் பிரதமர் இல்லாத நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விகளுக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வை மக்கள் ஆர்வத்துடன் காண விரும்புவதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment