தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண, ஆதரவை வழங்க SJB தீர்மானம்
தற்போது நாடு எதிர் நோக்கியுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டைக் மீட்டெடுப்பது மிகவும் அத்தியாவசியமானது என பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி நம்புகிறது.
அதன்பிரகாரம், தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளும் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கத்தில் பதவிகள் எதுனையும் பெறாமல், பாராளுமன்ற செயல்முறையின் கீழ் பூரண ஆதரவை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டது.
என்றாலும்,ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் சாதகமாக்கிக் கொள்ள மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பாக, எம்.பி.க்களை ஆளும் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் செயற்ப்பாடுகள் எடுக்கப்பட்டால் குறித்த ஆதரவை நிபந்தனையின்றி இடைநிறுத்துவதாகவும் நாடளுமன்றக் குழு முடிவு செய்தது.
ஊடகப் பிரிவு
ஐக்கிய மக்கள் சக்தி
Post a Comment