SJB யின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்க 11 கட்சிகளும், சுயாதீன Mp களும் தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகளும் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்தார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயேச்சைக் குழு ஒன்று கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
Post a Comment