அலி சப்ரி மீது, ஆளும்கட்சி Mp பாய்ச்சல், பதவி விலகவும் கோரிக்கை - ஜனாதிபதியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு
நிதியமைச்சர் மற்றும் நீதியமைச்சராக பதவி வகிக்கும் அலி சாப்ரியின் மீது பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாரிய குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்தகுமாரதுங்க இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்
குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியபோதும் ஜனாதிபதியை ஏமாற்றி 20வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்த அன்றைய நீதியமைச்சர் அலி சப்ரி, இன்று அதே நீதியமைச்சராக மீண்டும் 21வது அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக கூறுவதற்கு என்ன உரிமையிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அன்று இந்த 20வது திருத்தம் தொடரில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சாப்ரியும், அமைச்சர் ஜி.எல் பீரிஸூமே அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஏமாற்றியதாக கெவிந்து குமாரதுங்க குற்றம் சுமத்தினார்.
இந்தநிலையில் அவர் தொடர்ந்தும் நீதியமைச்சராக எவ்வாறு செயற்படமுடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
20வது திருத்தத்தில் இருந்த இரட்டை குடியுரிமைகளை கொண்டவர்கள் தொடர்பிலான விடயங்களை நிவர்த்தி செய்வதாக கூறியபோதும் அவர் அதனை மேற்கொள்ளவில்லை
சிறையில் இருந்த கலகொட அத்தே ஞானசார தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி தெரிவுசெய்தபோது அதனை ஆட்சேபித்து அலி சாப்ரி பதவி விலகினார்.
எனினும் அதிகமான அதிகாரங்களை வழங்கிய பின்னர் அதே அமைச்சு பதவியை ஏற்றுக்கொண்டார்.
எனவே ஜனாதிபதியை ஏமாற்றி, ஜனாதிபதியின் மீது இந்த நாட்டின் 69 லட்சம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்தமைக்கு பொறுப்பேற்று அலி சப்ரி நீதியமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும் குமாரதுங்க கோரிக்கை விடுத்தார்.
Post a Comment