அரசாங்கத்தைச் செய்தால், சரியாகச் செய்யுங்கள் - முடியாவிட்டால் வெளியேறுங்கள் - ஆளுங்கட்சி Mp ஜனாதிபதிக்கு கடிதம்
அரசாங்கம் செய்தால், அதைச் சரியாகச் செய்ய வேண்டும். மக்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாவிட்டால், அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று தெரிவித்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, இன்று (03) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஐந்து யோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளார்.
மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சரியான தகவல்களை மக்கள் உட்பட அனைத்து சக்திகளுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைவரையும் ஒரு குழுவாக ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும் அவர் ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித்துள்ளார்.
Post a Comment