பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டது - கொல்லப்பட்ட Mp க்கு சபையில் மௌன அஞ்சலி
பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய பிரதமரின் நியமனத்திற்குப் பின் இன்று பாராளுமன்றம் கூடுவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவிற்கு சபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர், நிட்டம்புவையில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மரணித்தார் என தகவல்கள் தெரிவித்தன.
Post a Comment