பொதுஜன பெரமுன Mp க்களுக்கு தொடர் அச்சம் - 140 பேரில், 91 பேரே பங்கேற்பு
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ தலைமையில் நேற்று (14.05.2022) பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 91 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். 140 பேர் கொண்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 39 பேர் பங்கேற்கவில்லை.
பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என, குறித்து கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திருகோணமலையில் கடற்படை பாதுகாப்பிலும், அவரின் குடும்ப உறவினர்கள் பாதுகாப்பாக தலைமறைவாகியுள்ள நிலையிலும், அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே தமது பாதுகாப்பு குறித்து தொடர் அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாகவே அவர்கள் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Post a Comment