முஸ்லிம்களை துன்புறுத்தியவர்களை கைது செய் - Go Home Gota கிளையில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு - தீன்சந்தி பிரதேசத்தில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை உடைத்து உடமைகளுக்கு தீ வைத்து அவர்களை தாக்கிய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து, தெல்வத்த சந்தியில் அமைந்துள்ள கோ ஹோம் கோட்டா கிளையில் இன்று ஞாயிற்றுக்கிழமை, 15 ஆம் திகதி அமைதி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இங்கு முஸ்லிம்களை துன்புறுத்தியவர்களை கைதுசெய், ராஜபக்ஷ இனவாதத்தை தூண்டுகிறார், போராட்டத் களத்தில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய், கோட்டா 20 ஐ இல்லாமலாக்கி 19 கொண்டுவா போன்ற சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.
நீர்கொழும்பில் மீண்டும் இனங்களுக்கிடையே மோதல் ஏற்படுத்த, அண்மையில் சில தரப்புக்கள் முயற்சித்த போதிலும், கத்தோலிக்க பங்குத் தந்தைகள், மெளலவிகள் உடனடியாக களத்தில் இறங்கி அதனை தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment