Go Home Gota போராட்டம் தொடர்ந்து அனுமதிக்கப்படுமா.?
'இது இலங்கை பொலிஸாரின் அறிவித்தல்இ பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ், மே மாதம் 6 ஆம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மே மாதம் 9 ஆம் திகதி முதல் (இன்று) காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் தவிரஇ எந்த ஒரு நபரும் பொது இடங்களில் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என இந்த உத்தரவின் மூலம் பணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்படுவது சட்டப்படி குற்றமாகும்' என்று அறிவித்தனர்.
எனினும் அவர்கள் வன்முறையில் ஈடுபடாத வரை அவர்களினால் பிரச்சினை இல்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே நிலைப்பாட்டிலேயே உள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் அவர் இதனை திரும்பத் திரும்ப வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில் பொலிசார் நேற்று அறிவித்தது போல ஆர்ப்பாட்டக்காரர்களை உடனடியாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த ஒருமாதங்களுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமஇ திங்கட்கிழமையன்று (09) பிரதமரின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர்இ ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் மீண்டும் போராட்டக்காரர்கள் அங்கு கூடியுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் தூதுவர்களிடம் இருந்தும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவுகள் கிடைத்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கமும், பொலிசாரும் தயக்கம் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment