கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்ட ஜோன்ஸ்டன், விசாரணைக்காக இன்று CID க்கு அழைப்பு
மே மாதம் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் 21 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் கடந்த வாரம் (16) உத்தரவிட்டார்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் 17ம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மே 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், காலி முகத்திடல் வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (24) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அழைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment