Header Ads



இம்தியாஸை எதிர்க்கும் ரணில், பெண் ஒருவரை பிரதி சபாநாயகராக்க சூழ்ச்சி


பாராளுமன்றத்தில் கடந்தமுறை பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற அவையில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, இம்தியாஸ் பார்க்கீர் மார்க்காருக்கு வாக்களிக்க வேண்டாமென நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், ஹரீஸ் போன்றவர்களிடம் இம்தியாஸுக்கு வாக்களிக்க வேண்டாமென வலியுறுத்தியும் இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்க,  அடுத்த பிரதி சபாநாயகராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்று சனிக்கிழமை 14 ஆம் திகதி தம்மைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம், பிரதமர் இதனைத் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பாராளுமன்றம் மே 17ஆம் திகதி கூடும் போது, பிரதி சபாநாயகர்  நியமிக்கப்பட உள்ளார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு, கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 17 ஆம் திகதி கூடும் போது, பிரதி சபாநாயகருக்கான தேர்தல் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய  மக்கள் சக்தியினால், இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் பிரதி நபாநாயகர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.