Header Ads



சுவிற்சர்லாந்தில் ஊடகவியலாளர் தவராஜாவின் 'மனுஷி' நூல் அறிமுக விழா


ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய ‘மனுஷி’ சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. 

 இந்நிகழ்வில் மூத்த ஊடகரும், திரைப்பட நடிகரும், சுவிஸ்-லவுசான் மாநகர சபை உறுப்பினருமான தம்பிப்பிள்ளை நமசிவாயம் (ஜெயகாந்த்) வரவேற்புரை நிகழ்த்தினார். நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் கமலினி கதிர் நிகழ்த்த விமர்சன உரையை ஊடகவியலாளரான கவிதாயினி சுகந்தி மூர்த்தி நிகழ்த்தினார். நூலின் முதல் பிரதியை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் குலம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் சிறப்பம்சமாக ‘புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பிலான பேச்சரங்கம் நடைபெற்றது. 

திருச்சி இனிய நந்தவனம் பதிப்பாக வெளியான மனுஷி சிறுகதை நூல் சேலம் தமிழ்ச் சங்கம், கம்பம்- பாரதி கலை இலக்கிய மன்றம் ஆகியவை நடத்திய போட்டிகளில் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.