பல்டி அடிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் ஹரீன் - நிதியமைச்சை நிராகரித்தார் ஹர்ஸ
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை, 13 ஆம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார இருவரும் பங்கேற்றுள்ளனர். இதன்போது தாம் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி, ரணிலுக்கு ஆதரவளிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 10 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இன்றைய தமது கட்சியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தில், அவர்கள் இருவரும் ரணிலுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்ததாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
அதேவேளை கலாநிதி ஹர்ஸ டி. சில்வா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சுப் பதவியை எடுக்கலாமென தகவல்கள் வெளியான அவர் குறித்த செய்தியை மறுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment