ரணிலுக்கு ஆதரவளிக்க விக்னேஸ்வரன் தீர்மானம் - முழு அமைச்சும் கிடைக்கிறது..?
- S தில்லைநாதன் -
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.
"எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்" என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான விக்னேஸ்வரன் எம்.பி., ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை தேடி வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விக்னேஸ்வரனின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரணில் பிரதமராக பதவி வகிக்கும் அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா ஓரங்கட்டப்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.
Post a Comment