சர்வகட்சி அரசு உருவாக்கவே இராஜினாமா செய்தேன் என்ற பிரதமர், அதிகாலையில் கடும் பாதுகாப்புடன் வெளியேற்றம்
சகல கட்சிகளும் அடங்கிய சர்வகட்சி அரசு உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தான் இராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடி நிலைக்கு சர்வகட்சி அரசே உகந்தது என மகாசங்கத்தினரும் சட்டத்தரணிகள் சங்கமும் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எந்த அர்ப்பணிப்பிற்கும் எதிர்காலத்தில் தான் தயாராக இருப்பதாகவும் சர்வகட்சி அமைத்து சவால்களுக்கு முகங்கொடுக்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ இராணுவ பாதுகாப்புடன் இன்று ( 10.05.2022) அதிகாலை அலரி மாளிகையை விட்டு வெளியேறினார்
Post a Comment