சாணக்கியன் மீது ரணில் பாய்ச்சல் - மஹிந்த சரணம் கச்சாமி என்று பின்னால் சென்றவர் அவரே எனவும் தெரிவிப்பு
தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று -06- உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில், நான் ராஜபக்ஷவர்களுடன் இருப்பதாக சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார். ஆனால் நான் அவர்களுடன் இருக்கவில்லை, ராஜபக்ஷ பிரபாகரனுடன் சேர்ந்துஎன்னை தோற்கடித்த நினைத்தார்.
நான் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார்.
எனவே, நான் அல்ல, சாணக்கியன் எம்.பியே மஹிந்தவின் பின்னால் சென்றார். அவர்தான் அப்போது “மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி” என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார். எனவே, ஏன் சாணக்கியன் எம்.பி என்னைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை என்றார்.
Post a Comment