இலங்கையில் சுவாரசியம் - துர்நாற்றதை ஆராய, டிரோன் உதவியுடன் தேடுதல் (வீடியோ)
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை சாய்ந்தமருது நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் பகல் இரவு வேளைகளில் திடிரென இத்துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தற்போது வீசுகின்ற துர்நாற்றம் குறித்து ஆராய்வதற்காக இரு நாட்களாக களவிஜயம் செய்ததுடன் டிரோன் கமரா உதவியுடன் தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது கல்முனை சாய்ந்தமருது பகுதியில் வீசுகின்ற துர்நாற்றம் எங்கிருந்து வருகின்றது.எதனால் வருகின்றது என்பதை எந்தவொரு ஆதாரத்துடன் அறிய முடியவில்லை.இருந்த போதிலும் சுமார் 3 மணி நேரமாக சந்தேகிக்கப்படடுகின்ற இடங்கள் அதனை சூழவுள்ள பகுதிகள் யாவும் டிரோன் கமராவின் உதவியுடன் கண்கானிக்கப்பட்டு சில இடங்கள் சந்தேகத்தில் அடையாளப்படுத்தப்பட்டன.
(பாறுக் ஷிஹான்)
Post a Comment