ராஜபக்சர்கள் பல சலுகைகளை தருவாக கூறி, அழைத்தபோதும் கூட நிராகரித்துவிட்டு மக்கள் பக்கம் நின்றவன் நான்
- ஹஸ்பர் -
மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனாலும் ராஜபக்சர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தங்களின் அதிகாரத்தை தக்கவைக்கவே நினைக்கிறார்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (08) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,
எல்லாப் போராட்டங்களுக்கும் முன் ஐக்கிய மக்கள் சக்தியே மக்கள் பக்கம் நின்று முதன் முதலாக ஜனாதிபதி செயலகம் உட்பட பலபோராட்டங்களை ஆரம்பித்து வைத்தது. சேர் பெயில், சேர்ட பிஸ்சுத போன்றவற்றை கூறியே ஆரம்பித்தோம் .தற்போது நாட்டில் அவசர கால சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டிருப்பது புதிய விடயமல்ல தனது சகோதரை பாதுகாக்க அரசியல் அமைப்பை மாற்றிய இவர்கள் இது ஒரு விடயமல்ல தனது குடும்பத்தை பாதுகாக்கவே இந்ந அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது பிரதமர் பதவி விலகுவார் என்ற செய்திகளையும் மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்பவும் நாடகமாடுகிறார்கள் .
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 52 நாள் சூழ் நிலையில் பெரும்பான்மை இல்லாமலே இந்த ராஜபக்சாக்கள் பின் கதவால் ஆட்சியை தக்க வைக்க முயன்றவர்கள் 2/3 பெரும்பான்மை இருக்கும் நிலையில் எப்படி இருக்கப்போகிறார்கள். இடைக்கால அரசாங்கம் என்பது ராஜபக்சர்களினதும் மொட்டுக் கட்சியினதும் கீழ் பிரதமரை ஏற்று அமைப்பதை ஐக்கிய மக்கள் சக்தி விரும்பாது மீண்டும் விமல் உதயன் கம்மன்பில போன்றவர்களுடன் ஆட்சியை கொண்டு செல்வதா ?? என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்துவது என்ற கோரிக்கையே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடகவுள்ளது. மேலும் பிரதி சபாநாயகர் தெரிவில் தான் கலந்து கொள்ளாமை தொடர்பிலும் கருத்து தெரிவித்தார்.
20 ஆவது திருத்த சட்ட மூலத்துக்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் இதை வைத்து சேருபூச நினைக்கிறார்கள் 20 க்கு வாக்களித்தவர்கள் போன்று சந்தர்ப்பவாத அரசியல் செய்பவன் அல்ல கொள்கையின் பக்கமே இருப்பவன்.2012 ல் கூட ராஜபக்சர்கள் பல சலுகைகளை தருவாக கூறி அழைத்த போதும் கூட நிராகரித்து விட்டு மக்கள் பக்கம் நின்றவன் .
திருகோணமலையில் எரிபொருள் பிரச்சினை காரணமாகவே கொழும்புக்கு செல்ல முடியாமலும் பிரதி சபாநாயகர் தெரிவில் பங்கேற்காமைக்கு காரணமாகும் இது தொடர்பில் எனது கட்சியின் தலைமைக்கும் செயலாளருக்கும் முன்கூட்டியே அறிவித்துள்ளேன் இதை வைத்து 20 க்கு வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் திசை திருப்பி சேறு பூச முனைவது சிறு பிள்ளைத்தனமான விடயமாகும் என்றார்.
Post a Comment