ராஜினாமா செய்யப் போகிறாரா அலி சப்ரி..?
2022 ஆம் ஆண்டுக்காக இரண்டாவது முறையாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அலி சப்றி நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராகி வருவதாகவும் அரசாங்கத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் அரசின் வருமானத்தை அதிகரிப்பது எப்படி என்பதை யோசனை முன்வைத்துள்ள அணியினர் தெளிவுப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியில் இருக்க எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் அலி சப்றி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து முரண்பாடுகள் காரணமாக நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மேலும் நீடிக்கும் என்பதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் என நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment