பாராளுமன்ற உறுப்பினர்களை டொலர் கொடுத்து வாங்க உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்கள் களமிறக்கம் - ஆளும்தரப்பு மீது குற்றச்சாட்டு
பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு குழுக்களை வைத்து தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களை பணத்தைக் கொண்டு பலியெடுக்கும் படலத்தை ஆளும் தரப்பு ஆரம்பித்து விட்டதாகவும், அந்த நடவடிக்கைகளில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் சிக்கமாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
முழு நாடும் கடுமையான வீழ்ச்சியில் இருக்கும் இந்நேரத்தில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையையே மேற்கொள்ள வேண்டி இருக்கும் பட்சத்திலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளை பலியெடுக்கும் நடவடிக்கையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டைப் பற்றிய உணர்வு இருந்தால் அரசாங்கம் செய்ய வேண்டியது, பாராளுமன்ற உறுப்பினர்களை பலியெடுக்கும் படலத்திற்கு டொலர்களை ஒதுக்குவதற்குப் பதிலாக நாட்டு மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக இந்தப் பணம் ஒதுக்கப்படுவதையே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment