இம்தியாஸ் வெற்றியடைந்தால், மஹிந்த வெளியேறுவாரா..?
பாராளுமன்றத்தில் புதிய பிரதி சபாநாயரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு, இன்று வியாழக்கிழமை, 5 ஆம் திகதி நடைபெற உள்ளது.
பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு உள்ள ஆதரவை, பரிசீலிக்கும் நடவடிக்கையாகவும் இது நம்பப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக பிரதி சபாநாயகர் பதவிக்கு களமிறக்கப்படவுள்ளதாக நம்பப்படும் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் வெற்றியடைந்தால், தனது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென ஒப்புக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஸ தமது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.
Post a Comment