கடுவெல நீதவான் பழி வாங்கப்பட்டார..? நீதிபதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த, பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை
கடுவெல நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பில் நீதிச் சேவைகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட தகவல் தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு பொலிஸாரின் கோரிக்கையை மே 4 ஆம் திகதி கடுவெல நீதவான் நிராகரித்திருந்தார்.
அன்றைய தினம், பாராளுமன்றத்திற்கு அருகாமையில் கைது செய்யப்பட்ட 13 இளைஞர் ஆர்ப்பாட்டக்காரர்களை சொந்த பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment