கோத்தபய, மஹிந்த குறித்து பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ள உதயங்க வீரதுங்க
ராஜபக்ச சகோதரர்களின் தாயின் சகோதரியின் புதல்வாரான அவர், இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.
எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் நான் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல மாட்டேன், இதற்கு முன்னர் சுமார் 7 ஆண்டுகள் வெளிநாட்டில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அந்த பாத்திரத்தை மீண்டும் நடிக்க தயாரில்லை. மக்கள் ஏகோபித்த ஆதரவை வைத்துக்கொண்டு, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக வந்தவர்கள், ஏன் ஏற்கனவே நாடு இருந்த இடத்தில் இருந்து நாட்டை அதளபாதாளத்திற்குள் தள்ள ஆரம்பித்தார்கள் என்பது எனக்கு கேள்விக் குறியாக இருக்கின்றது.
இதனை எனது அண்ணன் கோட்டாபய மாத்திரம் செய்திருந்தால், நான் அவரிடம் கேட்டிருப்பேன். எனினும் அண்ணனின் தலைமையின் கீழ் அவரை சுற்றி இருக்கும் அடிவருடிகள் காரணமாக சில விடயங்கள் தேவையான வகையில் நடக்கவில்லை.
ஜனாதிபதியோ, அமைச்சர்களோ தீர்மானங்களை எடுக்கும் போது, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்கள் இருக்கின்றனர். இன்னும் எதுவும் முடிந்து விடவில்லை. இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும். இதனை ஒவ்வொருவருக்கு தேவையான வகையில் செய்ய முடியாது.
நாட்டில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இருக்கின்றனர் அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய சரியான முடிவுகளை தீர்மானங்களையும் எடுக்க வேண்டும்.
கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது! உள்ளக தகவல்கள் பலவற்றை உடைத்த உதயங்க வீரதுங்க
நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் இரண்டு மாதங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை வழங்கினர். முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் வந்து ஒரு நாளுக்கு செலவு செய்யும் பணத்தை விட நான்கு மடங்கு அதிகமான விபரங்களை புள்ளிவிபரங்களில் வழங்கினர்.
முதல் இரண்டு மாதங்களில் 587 மில்லியன் சம்பாதித்ததாக கூறுகின்றனர். அதில் ஐந்தில் ஒரு பங்கே நாட்டுக்கு வருமானமாக கிடைத்துள்ளது, அந்த இடத்தில் ஜனாதிபதியை ஏமாற்றியுள்ளனர். சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்டவன் என்ற காரணத்தினால், இந்த உதாரணத்தை கூறினேன்.
ஒரு அதிகாரியை பதவி நீக்குமாறு ஜனாதிபதியிடம் கூறிய போது, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் என்னை சிறையில் அடைக்க போவதாக கூறினார். மீண்டும் நான் சிறைக்கு செல்வது நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம். வெள்ளை வான் வரலாம் அவை எல்லாம் பிரச்சினைகள் அல்ல.
ஜனாதிபதி எனது அண்ணன் என்னை திட்டினார். எங்கள் குடும்பத்தில் திட்டி பேசிக்கொள்வது சாதாரணம் விடயம். நான் பாடசாலையில் முதலாம் ஆண்டு படிக்கும் காலத்தில் இருந்தே குடும்பத்தினருடன் வளர்ந்தவன். இதனால், எங்களை திட்டுவது சாதாரணமான விடயம்.
மகிந்த அண்ணன் என்னை திட்டவில்லை என்றால், நான் ஏதோ ஒன்று குறைந்து விட்டது போல் உணர்வேன். அன்பு காரணமாக திட்டுவார். சாதாரணமாக அண்ணன் கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது. ஒரு அச்சுறுத்தல் போல் இருக்கும்.
மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது என்னை திட்டும் போது அப்படித்தான் இருக்கும். வெள்ளை வான் எனக்கு அனுப்பப்படலாம், அனுப்பப்படாலும் இருக்கலாம் தற்போது அது எனக்கு பிரச்சினையல்ல.
கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது! உள்ளக தகவல்கள் பலவற்றை உடைத்த உதயங்க வீரதுங்க
பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த விதத்தில் பதவியில் இருந்து நீக்கியது தவறு. அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டம் நடக்கும் போது நான் அங்கு இருந்தேன். நான் பிரதமருடன் இருந்தேன், அங்கு பலர் இருந்தனர்.
ஆனால், அங்கு வன்முறையை தூண்டி விடும் வகையில் பேசினர் என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அலரி மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு வந்த மக்களை காலிமுகத் திடலுக்கு அனுப்பும் எந்த தயார் நிலைகளும் இருக்கவில்லை.
அங்கு போகுமாறும் கூறவில்லை. ஆனால், மக்கள் சென்றனர். அதுதான் தேடி அறிய வேண்டிய பிரச்சினை. எங்கிருந்து மக்களுக்கு இந்த உந்து சக்தி கிடைத்தது. பிரதமருக்கு ஆதரவானர்கள் தூண்டி விடும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்த போன்றவர்கள் பற்றியே கூறுகின்றேன். காலிமுகத் திடலுக்கு செல்லுமாறு அவர்கள் மக்களை தூண்டவில்லை. நான் மகிந்த ராஜபக்சவுடன் இறுதி வரை இருந்தேன் என்பது பற்றி எனக்கு எந்த அச்சமும் இல்லை.
இதற்கு முன்னர் நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகள் சுமார் 5 ஆண்டுகளாக இப்படியான அச்சத்தில் இருந்தோம். இதனால், புதிதாக அச்சம் கொள்ள தேவையில்லை.
வீடுகளையும் சொத்துக்களை தீ மூட ஏன் இடமளித்தனர் என நான் கேட்கின்றேன். மிரிஹான சம்பவத்தின் பின்னர் சில மாதங்கள் இப்படியான எதிர்ப்புகள் இருந்து வந்தன. நாட்டில் தற்போது யுத்தம் இல்லை, அமைதியான போராட்டங்களை நடத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை.
ஏன் இந்த போராட்டங்கள் நின்று விடாமல் தொடர்ந்ததும் நடந்து வருகின்றன என்ற கேள்வி, ஜனாதிபதிக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது. எனக்கு தெரியும் ஜனாதிபதி சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
ஆனால், அந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மகிந்த ராஜபக்ச திருகோணமலைக்கு சென்ற பின்னர் நான் அவரை தொடர்புக்கொண்டு தகவல்களை வழங்கி வந்தேன்.
அவருக்கு தகவல்களை வேண்டியது கட்டாயம். யுத்தம் ஒன்று நடந்த நாட்டில் பாதுகாப்பு தொடர்பான அனுபமிக்க தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் போது, பேருந்து மீது தீ வைத்தவர்கள் மற்றும் பொல்லுகளை எடுத்து வந்தவர்களை தடுக்காமல் விட்டமைக்கான காரணம் இருக்கின்றது.
கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது! உள்ளக தகவல்கள் பலவற்றை உடைத்த உதயங்க வீரதுங்க
உதாரணமாக ஒருவரிடம் ஒரு வீட்டின் மீது தீ வைக்குமாறு கூறினால், அவர் அதனை செய்யவார். என்னிடம் அப்படியான பொறுப்பை ஒப்படைத்தால், அதனை செய்ய வேண்டியது எனது கடமை. ஏன் தண்ணீர் ஊற்றவில்லை என்னிடம் கேட்க கூடாது. தண்ணீரை ஊற்றுவது தீயை அணைக்க வேண்டியவர்களின் வேலை. தீ வைப்பது எனது வேலை.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து விலக முடியும், ஏன் இவை பேச்சுவார்த்தைகள் மூலம் நடக்காது இப்படி நடந்தன. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான தொடர்பு பாலத்திற்கு நடுவில் வேறு நபர்கள் வரும் போது அந்த பாலம் பலமாக இருக்காது.
இரண்டு அணிகள் இருக்கின்றன. வியத் கம அணி மற்றும் எமது பொதுஜன பெரமுனவின் அணி. பொதுஜன பெரமுனவின் அணி பசில் ராஜபக்சவின் அணி என்று கூற முடியாது. அது தற்போது பெரிய கட்சி. பசில் ராஜபக்ச அதன் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் கட்சியை வளர்த்தெடுத்தார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தியது வியத் மக மற்றும் பொதுஜன பெரமுன. பொதுஜன பெரமுனவினர் மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடுகளை கொண்டவர்கள், இவர்களின் நிலைப்பாடுகள் வியத் கமவின் கொள்கைளுடன் சில இடங்களில் ஒத்து போகாது.
இதன் காரணமாக சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. மகிந்த ராஜபக்ச காரணமாகவே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவி வந்தார். பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த முழு வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்காக கிடைத்த வாக்குகள். அந்த கட்சி மகிந்த ராஜபக்சவுக்காக உருவாக்கப்பட்டது.
நாங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்தை பயன்படுத்தியே வென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். ஜனாதிபதியின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர்கள் வெல்லவில்லை. அப்படியானால், மகிந்த ராஜபக்சவே அரசியல் ரீதியான பலம்.
கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது! உள்ளக தகவல்கள் பலவற்றை உடைத்த உதயங்க வீரதுங்க
இதனால், வியத் மகவுக்கு தேவையான வகையில் மகிந்தவை நீக்கியதை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம். ராஜபக்சவினரின் தாய் உயிருடன் இருந்தால், மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்து நீக்கப்பட்ட விதம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவை மன்னித்து இருக்க மாட்டார்.
அவர் மாத்திரமல்ல எனது தாய், ஜனாதிபதியின் சின்னம்மா, அவரை தூக்கி வளர்த்தவர். மகிந்த ராஜபக்சவை பதவி நீக்கிய விதத்தை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
ஜனாதிபதியுடன் இருக்கும் அணியினரே மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்கும் வகையில் செயற்பட்டனர். அந்த விடயத்தில் ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பிலும் ஒரு சிக்கல் இருக்கின்றது.
இப்படியான தீர்மானங்களை எடுக்கும் போது ஜனாதிபதி அரசியல் சார்ந்த நபர்களிடம் ஆலோசனைகளை பெற்றிருக்க வேண்டும். பசளை தொடர்பாக ஜனாதிபதி எடுத்த முடிவு தவறானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஜனாதிபதி விவசாயத்துடன் சம்பந்தப்பட்டவர் அல்ல. சமல் அண்ணன் அதில் சம்பந்தப்பட்டவர், அவர் அது சம்பந்தமான தீர்மானத்தை எடுத்திருந்தால், தவறாக மாற்றியிருக்காது.
கோட்டாபய ராஜபக்ச ஒரு இராணுவ அதிகாரியாக, போரை வென்றவர் என்ற வகையில் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் திறமையானவர். ஏன் அவரால், பேருந்துகள் எரியூட்டப்படுவதை நிறுத்த முடியாமல் போனது.
பிரச்சினைகளை தடுத்து நிறுத்தாது அதனை அதிகரிக்க செய்தனர் என்றே எமக்கு எண்ணத் தோன்றுகிறது. ஜனாதிபதி பதவி விலகுமாறு கோரியதால், பிரதமர் பதவி விலக நேரிட்டது.
கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது! உள்ளக தகவல்கள் பலவற்றை உடைத்த உதயங்க வீரதுங்க
ஏன் பிரதமர் பதவி விலக வேண்டும். பிரதமர் காரணமாகவே பொதுஜன பெரமுனவுக்கும் கோட்டாபய ராஜபக்வுக்கு வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் நிலைப்பாடு என்பது காலிமுகத் திடலில் இருப்பவர்களோ, முகநூலில் இருப்பவர்களோ அல்ல.
சிலர் இவர்களே இலங்கையின் முழு ஜன சமூகம் என கருதுகின்றனர். மகிந்த ராஜபக்ச மீதுள்ள நம்பிக்கை காரணமாக வாக்குகள் கிடைத்தன. ஜனாதிபதி நம்பிக்கை இருக்குமாயின் இரண்டு ஆண்டுகள் மக்கள் வெளியேறுமாறு கூறுவார்களா?.
மகிந்த ராஜபக்ச வெறுப்படைந்துள்ளார். தாய், தந்தையின் கல்லறைகளை பாதுகாக்க முடியாதவர், எங்களை பாதுகாப்பாரா?. மெதமுலன வீடும் அழியவில்லை, கால்டன் வீடும் அழியவில்லை. மெதமுலனவில் எனது இன்னுமொரு அண்ணனின் வீடே தீயிடப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட முழுமையான அரசாங்கத்தின் அதிகாரம் கையில் இருக்கும் போது தமது தாய், தந்தையின் கல்லறைகளை பாதுகாக்க முடியாவிட்டால், தான் வழங்கிய உத்தரவுகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், ஜனாதிபதி இவை பற்றி கண்டறியாது, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை.
வியத் கம மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய தரப்பே ஒன்றாக ஒரு மேசையில் அமர்ந்து ஒற்றுமையாக சாப்பிட்ட சகோதரர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தினர்.
கோட்டாபய திட்டும் போது அது அன்பாக இருக்காது! உள்ளக தகவல்கள் பலவற்றை உடைத்த உதயங்க வீரதுங்க
ராஜபக்சவினரின் அரசியல் இத்தோடு முடிந்து விடுமா என்று கூற முடியாது. அமெரிக்கா சார்பான அணி ஒன்று உருவானமை மற்றும் அமெரிக்காவுடன் பெரிய தொடர்புகள் இல்லாத அணி உருவானமை ஆகியனவே இவற்றுக்கு காரணம்.
இந்த அணிகளுக்கு இடையிலேயே இந்த மோதல் காணப்படுகிறது. நாட்டு மக்களுக்கு ராஜபக்சவினர் மீது வெறுப்பு ஏற்பட காரணமாக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ச. காலிமுகத் திடலில் யாருடைய பெயரை கூறுகின்றனர்.
தமது தாய், தந்தையின் கல்லறைகளை பாதுகாக்க முடியாது போனமை குறித்து மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டியதில்லை. வெள்ளை வான் எங்கெல்லாம் அனுப்பி வைக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது, ஆனால் சில விடயங்கள் பற்றி எனக்கு தெரியும்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றாக இருக்க பொருத்தமானவர்கள். இவர்கள் இருவருக்கும் குரோதமும் விரோதமும் அதிகம்.
துறைமுகத்தில் கொள்கலன் பெட்டியில் இருக்கும் எனது பிள்ளைகளின் கல்வி ஆவணங்களை சில நேரம் ரணில் விக்ரசிங்க விடுத்துக்கொள்ள உதவலாம், ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டாபய ராஜபக்ச அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கோட்டாபய ராஜபக்சவிட ரணில் சிறந்தவர். கோட்டாபய ஆத்திரமடைய கூடியவர்கள். அதிகமாக கோபப்படுபவர்.
மிக் விமான கொடுக்கல், வாங்கல் தொடர்பான கோப்புகள் மீண்டும் திறக்கப்படுவதை நான் விரும்புகிறேன். மிக் விமான கொடுக்கல், வாங்கல்கள் கோப்புகள் தொடர்பில் நாட்டின் நீதிமன்றங்களில் முக்கியமான உண்மைகள் பேசப்படுவதில்லை.
மிக் விமானங்களை கொள்வனவு செய்ய அனுமதி, வழங்கியது அதில் கையெழுத்திட்டது உதயங்க வீரதுங்க அல்ல. அனுமதி வழங்கியது கோட்டாபய ராஜபக்ச மற்றும் அமைச்சரவை விலை மனு குழுவில் 23 பேர் இருக்கின்றனர் எனவும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.
Post a Comment