Header Ads



ஈஸ்டர் தாக்குதல் குறித்து பலர் அறிந்திருந்தும் தேர்தலில் வெற்றி பெற அதை நடக்க அனுமதித்தனர்


தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை சிலர் மறைத்ததாகவும், அதில் இருந்து முன்னாள் அரச தலைவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக 'நாட்டைக் காப்போம், நாட்டுக்கு நீதி வழங்குவோம்' எனச் சொல்ல விரும்பியதால் அவ்வாறு செய்ததாகவும் கர்தினால் கூறினார்.

அவ்வாறான எண்ணம் இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கப் போகிறது என்றும், அதில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு தனக்கு அறிவித்திருக்க வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் தெரிவித்தார்.

இத்தாலியின் பதுவாவிலுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (1) இடம்பெற்ற விசேட இறை வழிபாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு 3 வருடங்களாக நீதி கோரியும் இலங்கை ஆட்சியாளர்களால் நீதி கிடைக்காத காரணத்தினால் சர்வதேச சமூகத்திற்கு செல்ல நேரிட்டதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பலர் அறிந்திருந்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற காரணத்தினால் அது நடக்க அனுமதித்ததாகவும் கர்தினால் கூறினார்.

அரசியல்வாதிகள் ஊழலை சமூகத்தின் அரசனாக்கியதோடு நாட்டின் சட்டத்தையும் அரசனாக்கியுள்ளதாகத் தெரிவித்த கொழும்பு பேராயர், தமக்கு வேண்டிய உயர் அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தாம் விரும்பியவாறு செயற்பட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் வாக்கு மூலம் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் தற்போது பணம் சேர்த்து வெளிநாடுகளில் தொழில் தொடங்குவதாகவும், ஈஸ்டர் தாக்குதலை மூடி மறைக்கும் முயற்சியே இந்த ஊழல் திட்டம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இருவர் மீதான வழக்கு கைவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கையை புதிய பயணத்தில் கொண்டு செல்வதற்கு தேவையான பலத்தை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் கர்தினால் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.