ஐக்கிய அரபு இராச்சிய புதிய ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான்
ஐக்கிய அரபு இராச்சிய புதிய, ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
7 எமிரேட்ஸ் ஆட்சியாளர்களை ஒன்றிணைக்கும் கூட்டாட்சி கவுன்சில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்க 30 நாட்களுக்குள் கூட வேண்டும். அந்தவகையில் கவுன்சில் இன்றைய தினமே கூடி புதிய ஆட்சியாளரை தெரிவு செய்துவிட்டது.
7 அமீரகங்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட பெடரல் சுப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களால் ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
நீண்டகால பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியான ஷேக் கலீஃபா பின் சையீத் அல் நஹ்யான் தனது 73ஆவது வயதில் நேற்று 14-05-2022 காலமானார்.
இதையடுத்து ஐக்கிய அரபு இராச்சிய புதிய, ஜனாதிபதியாக ஷேக் மொஹமட் பின் சயீத் நல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு, உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment