Header Ads



நாட்டு மக்கள் கோரும் வெற்றிக்காக இன்று தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - சஜித்


மக்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுத்தது யார்? இப்போது புரிந்துகொள்ள முடியும்.  இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகரிடம் கையளித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு. 

இந்நாட்டு மக்கள் கோரும் வெற்றிக்காக இன்று தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைவாக அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

மக்களின் எதிர்பார்ப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைகளில் கையொப்பமிடாத மற்றும் ஆதரவளிக்காத மக்கள் பிரதிநிதிகள் யார் என்பதை மக்கள் அடையாளம் காண முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (03) கையளிக்கப்பட்டது.

இதன் போது, செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், கயந்த கருணாதிலக, எரான் விக்கிரமரத்ன, மனுஷ நாணயக்கார ஆகிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.