பொதுஜன பெரமுனவுக்குள் வெடிப்பா...?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து இந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்த செயற்பாட்டுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியின் தலைவர் பதவியை பொறுபேற்குமாறு தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவியை வகித்து வரும் சிரேஷ்ட தலைவருக்கு அழைப்பு விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பல கட்சிகள் புதிய கட்சியுடன் உடன்படிக்கைகளை செய்து அங்கத்துவத்தை பெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய கட்சியை ஆரம்பிக்க எடுத்துள்ள முடிவு காரணமாக அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
Post a Comment