காலி முகத்திடல் போராட்டக் களம் எப்படி உள்ளது..?
கொழும்பு காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் பலருக்கு தங்குவது, உண்பது, உறங்குவது என அனைத்தும் போராட்டக் களத்தில்தான். மாற்று உடைகளை எடுத்து வந்து துவைத்துப் பயன்படுத்துகின்றனர். கழிவறை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
தூங்கி எழுந்ததும் தயாராகி காலை முதலே போராட்டத்தைத் தொடங்கி விடுகிறார்கள்.
காலை, மாலை, இரவு என மூன்று வேளையிலும் இலவசமாக உணவு அளிக்கப்படுகிறது. குடிப்பதற்கு நீர், பானங்கள் ஆகியவையும் கிடைக்கின்றன.
நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தும் வசதியை போராட்டக்காரர்கள் செய்திருக்கிறார்கள். 24 மணி நேரம் இயங்கும் இந்தச் சேவையில் மின்சாரத்தைத் தேக்கிவைத்து இரவு நேரத்தில் பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது.
போராட்டக்காரர்களின் திறன்பேசிகளை உயிர்ப்போடு வைத்திருக்க இது பயன்படுகிறது.
தயாரிப்பு: எம் மணிகண்டன்
Post a Comment