Header Ads



நாட்டை அழிக்கும் ஒரு கும்பலோடு சேருவதை விட, எதிர்க்கட்சியில் இருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது - சஜித்


எக்காரணம் கொண்டும் ஐக்கிய மக்கள் சகதியின்,ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கைகளை காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லை எனவும், மக்கள் போராட்டத்தின் கோரிக்கைக்குப் புறம்பாக எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) தெரிவித்தார்.

மேல் மாகாணம், மஹரானுகேகொட தர்மராஜா வித்தியாலயத்திற்கு பிரபஞ்சம்  வேலைத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

நவீன உலகில் டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இந்நாட்டின் சிறுவர் தலைமுறையை தொழில்நுட்ப திறமையாலும், ஸ்மார்ட் கணிணி திறமையாலும்,அறிவை அடிப்படையாக கொண்ட நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து  பூரணத்துவத்தை வழங்கும் நோக்குடன் எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவிற்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் கணிணி உபகரணங்களை வழங்கும் பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்தின் 20 ஆவது கட்ட நிகழ்வு இன்று நடைபெற்றது. 

இந்நாட்டு சிறுவர்கள் டிஜிடல்  உலகில் தலைநிமிர்ந்து செயற்படும் நோக்கில் செயற்படுத்தப்படுகின்ற டிஜிடல்  வகுப்பறைகளுக்கான நவீன கணனி  தொழில்நுட்ப திரைகள் மற்றும் நவீன கணனிகளை வழங்கும் பிரபஞ்சம் திட்டத்தின் 20 ஆவது கட்டமாக எட்டு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரம் (846,000) ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைக்கான கணனி திரைகள் மற்றும் கணனி  உபகரணங்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

போராட்டத்தில் மக்களின் அபிலாஷைகளுக்கு தான் ஒருபோதும் துரோகம் இழைத்ததில்லை எனவும், எதிர்காலத்திலும் அந்த அபிலாஷைகளுக்கு துரோகம் இழைக்கப்படமாட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டை அழிக்கும் ஒரு கும்பலோடு சேருவதை விட எதிர்க்கட்சியில் இருப்பது தனக்கு திருப்தி அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

வரப்பிரசாதங்ஙளுக்காகவும்,சலுகைகளுக்காகவும் தன் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும்,ஐக்கிய மக்கள் சக்தியாகவும் இந்நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இதற்காக தனக்கு பிரதமர் பதவி தேவையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் நலனுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு வேலைத்திட்டத்தை தொடங்கியதாகவும்,எதிர்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்காக பிரபஞ்சம் வேலைத்திட்டம் தொடங்கப்பட்டதாகவும்,அப்பிள்ளைகளின் நலனுக்காகவே பேருந்துகள் அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சிலர் இந்த சமூகப் பணிகளுக்கும் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.