Header Ads



பதவி விலக கூறுவது இலகு, நாட்டைபொறுப்பேற்க எவரும் வரவில்லை - இல்லையென்றால் தேரர்கள் பொறுப்பேற்க வேண்டி வரும்


சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆனால் நாட்டின் பொறுப்பை ஏற்க இதுவரை எவரும் முன்வரவில்லை என கொழும்பு பல்கலைக்கழக வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தையும் பிரதமரையும் நீக்கி இடைக்கால அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான பிரேரணை மாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் வினவியபோது, ​​அவர்கள் பதவி விலக வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்க யாராவது முன்வர வேண்டும் என சுட்டிக்காட்டினார். அப்படி இல்லை என்றால் அரசாங்கத்தின் பொறுப்பை மாநாயக்க தேரர்கள் பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும்.

சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் தான் இருப்பதாகவும், இந்த நிலைமை குறித்து ஆரம்பம் முதலே அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தாம் கூறுவதை காது கொடுத்து கேட்காமையினால் ஏற்பட்டதன் விளைவு என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் கட்சிகளை வெற்றி கொள்வதற்காக உழைக்கவில்லை. நாட்டையும் தேசத்தையும் மதத்தையும் வென்று சிறந்த சமுதாயத்தை உருவாக்கவே முயற்சிக்கின்றோம். இப்போது என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சித்தாலும், நாங்கள் பிரச்சினைகளை சிக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.