Header Ads



இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தோ்தலில் ஷஸ்னா முஸம்மில் வெற்றி


 (அஷ்ரப் ஏ சமத்)

ஊவா மாகாணசபையின்  ஆளுனா் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின்  மகள் ஷஸ்னா முஸம்மில்   கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். 

இங்கிலாந்தில் நடைபெற்ற 2022   மே 5ஆம் திகதி நடைபெற்ற  டொட்டஹன் வட்டாரத்திற்கான  உள்ளுராட்சித் தோ்தலில்  கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிட்டு கூடிய வாக்குகளைப் பெற்று அந்த வட்டார உறுப்பிணராக  தெரிபு செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த வருடமும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற மில்டன் நகரில்  குறிப்பிட்ட தோ்தலில்  போட்டியிட்டு 135 வாக்குகளினால் தோல்விகண்டாா். 

இம்முறை டொட்டஹன்வட்டராததில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்பிரதேசததில் இலங்கை வாக்காளா்கள் இல்லாதபோதிலும்   இந் நகரை தெரிவு செய்து அப் பிரதேசத்தில்   தனது பிரச்சார சமூக சேவைகளைச் செய்து அங்கு வாழும் வெளிநாட்டவா்கள் மனதை வென்று வெற்றிபெற்றார். 

இலங்கை முஸ்லிம் பெண் அதாவது ஜக்கிய இராச்சியத்தின்  கொண்சவேட் கட்சியில் உறுப்புரிமை பெறுவது கஸ்டமாக இருநதாலும் அவா்களது மனதை வென்று அதில் உறுப்புரிமை பெற்றது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.  

இங்கிலாந்திலுள்ள திறந்த பல்கலைக்கழகத்திலுள்ள எம்.பி.ஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா  முஷம்மில் திறந்த பல்கலைக்கழகம் சமுக சேவை அமைப்புக்களில் தொண்டராக பல்வேறு அமைப்புக்களில் உறுப்பிணராக இருந்து வயதுவந்தவா்களுக்கு உதவுதல், கெயினாஷ் இளைஞா் அமைப்பு,ஊடாக சிறுவா்கள் சிறையில் உள்ள பெற்றோா்கள் அவா்களது குழந்தைகள் பராமரிப்பு போன்ற சமுக சேவைகளைச் செய்து வருகின்றாா். அத்துடன் லண்டனில் கொவிட் 19 தொற்று நோய் சம்பந்தமான சுகாதார சங்கத்தில் இணைந்து வக்சின் வழங்கும் நிறுவனத்தின் தொண்டராகவும்  அங்கு பணிபுரிந்து வருகின்றாா்.

அயலவர்களின் நிலைமையினை மேம்படுத்துவதற்கு சிறிய மற்றும் பாரிய உள்நாட்டு வா்த்தகத்திற்கு உதபுவவா். இலங்கையில் கொழும்பு 7 ல் உள்ள மகளிா் கல்லுாாியில் ஆங்கில மொழி மூலம் கல்விகற்றவா், கொழும்பு மாநகர சபையில் அவரது தந்தை முஸம்மில் மேயராக இருந்த காலத்தில் அவரது பிரத்தியோக செயலாளராக கடமையாற்றினாா். அத்துடன் இலங்கை பெண்கள் வியாபார அமைப்பின் 2018  பணிப்பாளா் சபை உறுப்பிணராகவும் கடமையாற்றியுள்ளாா். அமேரிக்க அமைப்பான வியாபார அமைப்பொன்றின் துாதுவர் பதவியையும் வகித்துள்ளா்.  கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பாராளுமன்றத் தோ்தல் காலத்தில் இலங்கை வந்து   பிரச்சார பணிகளையும் மேற்கெண்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.