இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை குறித்து, வெளிநாட்டு தூதுவர்களுடன் நீண்டநேர சந்திப்பு
இன்று (14) பல்வேறு நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்தார்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி, இலங்கையில் உள்ள ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் தூதுவர் ஹோல்கர் லோதர் சியூபர்ட், இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்ட்டு, இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப், இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மானெல்லா, இலங்கைக்கான ரோமானிய தூதுவர் விக்டர் சியூஜெடா உள்ளிட்ட தூதுவர்களே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, இலங்கையின் முன்னேக்கிய நகர்வுக்கு ஆதரவளிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் தூதுவர்களிடம் கோரிக்கையையும் விடுத்தார்.
அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த 48 மணித்தியாலத்தில் பல்வேறு வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்தமையும் தமது ஆட்சிக்கு ஆதரவு தேடியமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment