போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க, புதியவகை கண்ணீர்ப்புகை குண்டு - கள நிலைமை மோசமாகிறது, சாபங்கள் படுமோசமாகிறது
அரசாங்கத்தின் கையில் இருப்பதோ 50 மில்லியன் டொலர்...
80 பில்லியன் டொலர் எப்படி 50 மில்லியன் ஆனது , இவற்றுக்கெல்லாம் என்ன பரிகாரம் என்று யோசிக்காமல், போராட்டங்களை கட்டுப்படுத்த புதியவகை கண்ணீர்ப்புகை குண்டுகளை தருவித்திருக்கிறது அரசு...
மற்ற குண்டுகளை போல இவற்றை உடனடியாக கையில் எடுத்து திருப்பி வீச முடியாது... வெப்பம்..
கீழே விழுந்தவுடன் மூன்றாக சிதறும் இந்த வாயுக் குண்டு , அதிக பட்ச எரிச்சலை கண்களுக்குத் தரும்... கிட்டத்தட்ட 3 மணி நேரம் கண்களை திறக்க முடியாது...( நேற்று நாடாளுமன்றம் அருகே மாணவர்கள் மீது வீசப்பட்டது ).
மாணவர், மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென எப்போது யோசித்ததோ , அப்போதே அரசு தோல்வியடைந்த அரசாக மாறிவிட்டது..
மக்களோ , மாணவர்களோ பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார்களா? பெரும் கலவரத்தை அடக்க பயன்படுத்தும் இவ்வாறான பொருட்கள் இறக்க பயன்படுத்தும் காசை கொஞ்சம் மருந்துகளை வாங்க பயன்படுத்தியிருக்க முடியாதா ?
சாத்வீக போராட்டத்தின் தாற்பரியம் அரசுக்கு இன்னமும் விளங்கவில்லை... இன்னமும் மக்கள் மத்தியில் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக ஆட்சியாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்..
கள நிலைமை மிக மோசம்...
வரிசைகளில் நிற்கும் மக்களின் சாபங்கள் அதைவிட படுமோசமாக இருக்கின்றன...
நிலைமையை அரசு உணரும்போது எல்லாமே முடிந்திருக்கும்...!
Siva Ramasamy
Post a Comment