Header Ads



உணவு அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையினால் மக்கள் இறக்க நேரிடும்


நாட்டிலுள்ள நெருக்கடி காரணமாக இன்னும் மூன்று மாதங்களில் பொதுமக்கள் பலர் உயிரிழப்பார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரித்துள்ளது.

இணையத்தளம் ஒன்றுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பல எச்சரிக்கைகளை விடுத்துள்ள போதிலும், பொதுஜன பெரமுன அந்த எச்சரிக்கைகளை புறக்கணித்து தங்கள் கட்சியை அவமதித்ததாக அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறையினால் பெருமளவிலான மக்கள் இறக்க நேரிடும் என சுட்டிக்காட்டிய அமரவீர, சர்வகட்சி கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதே இதற்கு ஒரே தீர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச ஆட்சியானது வெளிப்படையான நடவடிக்கைகளுக்கு புறம்பாக ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளது.

அந்தச் சந்தர்ப்பங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால், தான் இன்று உயிருடன் இருந்திருக்க வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார்.

நாட்டின் உள்நாட்டு நெருக்கடிக்கு தீர்வு காண மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இணைந்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்காவிட்டால், தமது கட்சியும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் எந்த உடன்பாட்டையும் எட்டாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. தங்களுடைய நிலை என்ன.

    ReplyDelete

Powered by Blogger.