நான் இராஜினாமா செய்வதாக யார் சொன்னது...?
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் தாம் இதுவரை தீர்மானம் எடுக்காவிட்டாலும், ஜனாதிபதி தம்மை இராஜினாமா செய்யுமாறு கோரினால், தன்னால் பின்வாங்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி - இன்று நீங்கள் இராஜினாமா செய்த பிறகு புதிய பிரதமர் யார்?
பதில் - நான் இராஜினாமா செய்வதாக யார் சொன்னது?
கேள்வி - இன்று நாட்டில் உள்ள அனைவரும் இதைப் பற்றி பேசுகிறார்கள்.
பதில் - நான் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதை ஜனாதிபதிக்கு கூட தெரிவிக்கவில்லை.
கேள்வி - நீங்கள் பொறுப்பை தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்களா?
பதில் - ஆம். எனக்கு இராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை.
கேள்வி - நீங்கள் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்கின்றீர்களா. இராஜினாமா பற்றி அங்கே அறிக்கை விடலாம் அல்லவா?
பதில் - நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வேன். ஆனால் இராஜினாமா என்பது நீங்கள் நினைப்பது போல் இல்லை. புதிய அரசாங்கம் மற்றும் புதிய அமைச்சரவை பற்றி இன்று பல்வேறு வதந்திகள் உலவுகின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படவில்லை.” என தெரிவித்துள்ளார்.
Post a Comment