வீரவன்ச, கம்மன்பில, வாசுதேவ, சுசில், அநுர ரணிலுக்கு ஆதரவு - அமைச்சுப் பதவி பெறுவது குறித்து சு.க. ஆராய்வு
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கவும், பாராளுமன்றத்தில் ரணிலுக்கு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொடுக்கவும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
அதேவேளை பிரதமர் ரணில் தலைமையிலான அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இன்று (16) அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கவுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று முற்பகல் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்த நிலையில், அமைச்சு பொறுப்புக்களை ஏற்பது தொடர்பில் இன்றைய மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அத்துடன் பொது ஜன பெரமுனவில் தோர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து, அக்கட்சியுடன் பின்னர் முரண்பட்டவர்களான சுசில் பிரேம்ஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ரணிலுக்கு ஆதவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment