அமைச்சுக்களுக்கான விற்பனை டொலரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - ஐக்கிய மக்கள் சக்தி
நாடாளுமன்றத்தில் அமைச்சுக்களுக்கான விற்பனை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதன் பின்னணியில் ராஜபக்சக்களுக்கு விசுவாசமான வர்த்தக நண்பர்கள் செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தனது முகப்புத்தக பக்கத்தில் காணொளியொன்றினை வெளியிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் அமைச்சுகளுக்கான விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கான விற்பனை ரூபாயில் அல்ல டொலரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிக உலகின் பின்னணியில் ராஜபக்சக்களின் நெருங்கிய சகாக்களே செயற்பட்டு வருகின்றனர். இது வெட்கக்கேடான செயல்.
ஐக்கிய மக்கள் சக்தியில் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. நியாயமான விடயங்களுக்கு மாத்திரமே குரல் கொடுப்போம். அமைச்சு பதவிகளுக்காக ஒருபோதும் விலை போகமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment