ஊரடங்கு தளர்வு, எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று, முந்தி அடித்த மக்கள் (வீடியோ)
- ஹஸ்பர் -
நாட்டில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து இன்று (12) காலை முதல் எரி பொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. திருகோணமலை மாவட்டம் முள்ளிப்பொத்தானையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் இன்றைய தினம் பெற்றோலினை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை யாவரும் அறிந்த விடயமே ஆனாலும் இன்று (12) மதியம் 2.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதையடுத்து பெற்றோலுக்காக முந்தி அடித்துக் கொள்வதை காண முடிகிறது.
எது எவ்வாறாக இருந்த போதிலும் ஊரடங்கு சட்டம் காரணமாக எரிபொருள் விநியோகம் இரு நாட்கள் இடம் பெறவில்லை .எரி பொருள் நிரப்பு நிலையங்கள் மூடிக் காணப்பட்டன. நீண்ட வரிசையில் காத்திருந்த போதும் பெற்றோல் முடிவடைந்துள்ளது
தற்போது காலை முதல் எரி பொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலினை பெறுவதற்காக இவ்வாறான நீண்ட வரிசை காணப்படுவதுடன் பல மணி நேரங்களை இங்கு செலவளிக்க வேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இருந்த போதிலும் டீசல் விநியோகம் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment