ஹரீன் சஜித் பிளவு - நடந்ததன் பின்னணி என்ன..?
- சிவராஜா ராமசாமி -
மழை நேரத்தில் உப்பு விற்ற கதை..
நேற்றுமுன்தினம் சஜித்தை சந்தித்து நீண்டநேரம் பேசிய ஹரீன் இஇப்போதுள்ள நிலையை விளக்கி நாட்டின் நன்மை கருதி இடைக்கால அரசை எடுங்கள் என்று கெஞ்சாத குறையாக கேட்டாராம்..
சரி என்று ஹரீனிடம் பதிலளித்த சஜித் இஇன்று மீண்டும் பழைய நிபந்தனைகளை விதித்து ஜனாதிபதியுடனான பேச்சை தொடர்ந்துகொண்டிருந்தாராம்...
அதனால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடே ஹரீனின் இந்த முடிவு... ஹரீனுடன் மேலும் பலர் இந்த முடிவை எடுப்பார்கள் போலத் தெரிகிறது..
இன்று இரணில் பிரதமராக வரப்போகிறார் என்ற செய்தி வந்த கையோடு இஏற்கனவே விதித்த நிபந்தனைகளை தளர்த்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புகிறார் சஜித்...
மறுபுறம் ரணிலை விரும்பாத மைத்ரிபாலவோ இ டலஸ் இநிமல் சிறிபால இ விஜயதாச ஆகியோரின் பெயர்களை பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கு அனுப்புகிறார்..
அரசியல் செய்யப்போய் மைத்திரியும் இசஜித்தும் இன்று ஒரே படகில்...
ரணில் ஒரேயொரு எம்.பி சீட்டை வைத்து இபிரதமர் பதவியை ஏற்று பொருளாதாரத்தை நிமிர்த்தினால் என்ன நடக்கும் ?
பொதுபெரமுனவுக்கு ஒரு பெசில்..
எஸ்.ஜே .பிக்கு ஒரு சஜித்...
Post a Comment