நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்க, பெருநாள் தினத்தில் விஷேட துஆ பிராத்தனை
- எஸ்.எம்.எம்.முர்ஷித் -
நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில் இன்று செவ்வாய்க்கிழமை (03.05.2022) ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில் அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த வெளியிலாளன பெருநாள் தொழுகை இன்று காலை 06.20 மணிக்கு ஓட்டமாவடி மண்ணு ஸல்வா வளாகத்தில் இடம் பெற்றது.
பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸகவி நடாத்தியதுடன் மூன்று வருடங்களின் பின்னர் திறந்த வெளியிலாளான தொழுகை இடம் பெற்றதால் அதிகமான ஆண்களும் பெண்களும் இத் தொழுகையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கும் உலக மக்களின் அமைதிக்காகவும் விஷேட துஆ பிராத்தனையும் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸகவியால் நிகழ்த்தப்பட்டது.
Post a Comment