தந்தைக்கும், மகனுக்கும் நாட்டைவிட்டு வெளியேறத் தடை - நீதிமன்றம் அதிரடி - இலங்கையை விட்டு ஓடமாட்டோம் என்கிறார் நாமல்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஇ நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இயைடுத்து முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,
எனக்கோ, எனது தந்தைக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Post a Comment