Header Ads



குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்தது, வழமைக்கு மாறாக கடல் அலை (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில்  தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக முன்நோக்கி வந்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாமல் தங்களது உடமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை(13)  ஈடுபட்டிருந்தனர்.

தாழமுக்கம் காரணமாக அம்பாறை  மாவட்டத்தில் கடல் முன்னோக்கி வருவதுடன் மீன்பிடி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக  மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன்  மீனவர்களின் தங்குமிடம் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் பகுதிகளை கடல் அலைகள் சூழ்ந்துள்ளதுடன் போக்குவரத்து மேற்கொள்ளும் பாதைக்கு அருகாமையில் கடல் அலை வந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு இழுத்துச் செல்வதுடன் கடலின் அலை அதிகம் வருவதால் மீனவர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 வழமைக்கு மாறாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துஇ கடல் நீர் கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள நிலப் பகுதிக்குள்ளும் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்துக்குள்ளும் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

No comments

Powered by Blogger.