கோட்டா இங்கே கேள், எடுத்த பணத்தை எமக்குத்தா, கதை வேண்டாம் வீட்டுக்குப் போ என ஆர்ப்பாட்டம் (வீடியோ)
- Ismathul Rahuman -
அரசாங்கத்திற்கு எதிராக சிறி லங்கா சுதந்திரக் கட்சி நீர்கொழும்பு பஸ் நிலையம் முன்பாக இன்று 1ம் திகதி பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் நீர்கொழும்பு பிரதி மேயருமான எம்.ஏ. இசட்.பரீஸ்,நீர்கொழும்பு அமைப்பாளர் ஜுட் பிரிட்டன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்சியாளர்கள் சுகபோகத்தில் மக்கள் பட்டினியில், மோசடி அரசியலுக்கு ஆப்பு வைப்போம், கோட்டா கோ ஹோம், கோட்டா இங்கே கேள் எடுத்த பணத்தை எமக்குத்தா, கதை வேண்டாம் கோட்டா வீட்டுக்குப் போ என சுலோகங்களை எழுப்பினர்.
Post a Comment