இலங்கைக்காக வருத்தப்படும் இஸ்ரேல்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை துரதிர்ஷ்டவசமானது என்று இஸ்ரேலின் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான தூதுவர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை தீவு மீண்டும் ஸ்திரத்தன்மைக்கு வர சுற்றுலா மற்றும் விவசாயத்தில் அதன் திறனைப் பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தமது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்க இலங்கைக்கு சென்றிருந்தபோது அது, மிகப்பெரிய ஆற்றல் கொண்ட ஒரு அழகான நாடு என்பதை கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அங்கு பொருளாதார மற்றும் அரசியல் சரிவு இருப்பதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கிலோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment