சுதந்திரக் கட்சி ரணிலுக்கு ஆதரவளிக்குமா..?
பாராளுமன்றத்தில் தனது 113 என்ற பெரும்பான்மையை காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிக்குமா என் கேள்வி எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (13) மைத்திரிபால சிறிசேன தமைமையில் கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் தீர்மானம் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது.
நல்லாட்சி அரசாங்கத்தின் முறிவுக்கு மைத்திரி - ரணில் முறுகலே பிரதான காரணமாக அமைந்ததை வாசகர்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
Post a Comment